சமூக ஊடகமான இன்ஸ்டாகிராம் (Instagram) அதிகம் (Uninstall) அன் இன்ஸ்டோல் செய்யப்பட்ட செயலிகளிகளில் முதலிடம் பிடித்துள்ளது.
இந்த தகவலை அமெரிக்காவின் TRG Data center வெளியிட்டுள்ளது.
இந்த வருட ஆரம்பம் தொடக்கம் தற்போது வரை மேற்கொள்ளப்பட்டு தகவல்களின் அடிப்படையிலே இந்த தகவல் வெளியாகியுள்ளது.
இன்ஸ்டாகிராம் கணக்கு
உலகம் முழுவதிலும் ஒவ்வொரு மாதமும் சுமார் 10 லட்சத்துக்கும் அதிகமான மக்கள் இன்ஸ்டாகிராம் கணக்கை எவ்வாறு டிலிட் செய்வது(how to delete instagram) என இணையத்தில் தேடியுள்ளதாக மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும், Snapchat மற்றும் X ஆகிய சமூக வலைத்தளங்கள் முறையே 128,500 மற்றும் 123,000 அன் இன்ஸ்டோல் (Uninstall )செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிய வந்துள்ளது.
அதிகம் (Uninstall) அன் இன்ஸ்டோல் செய்யப்பட்ட செயலிகளிகளில் முதல் பத்து இடங்களுக்குள் டெலிகிராம்(Telegram), முகப்புத்தகம்(Facebook ), டிக்டொக்(Tiktok), யூடியூப்(Youtube) , வட்சப்(WhatsApp), மற்றும் வீ சேட் (WeChat ) ஆகிய செயலிகளும் உள்ளடங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.