பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் உள்ள குடிவரவு பிரிவுகளில் நீண்ட வரிசையில் பயணிகள் நிற்பது குறித்த புகைப்படங்கள் மற்றும் அறிக்கைகள் தொடர்பில் ஜனாதிபதி செயலகத்தின் கவனம் செலுத்தப்பட்டுள்ளது.
வெளிநாட்டில் உள்ள மற்ற விமான நிலையங்களில் நீண்ட வரிசைகள் இருப்பதில்லை என்று என்று சில இலங்கையர்கள், குறிப்பாக புலம்பெயர்ந்தவர்களும் தமது முறைப்பாடுகளை தெரிவித்து வருகின்றனர்.
இந்தநிலையில் குறிப்பாக சுற்றுலாப் பயணிகள் வரிசையில் காத்திருப்பது, சுற்றுலாத்துறைக்கு ஆரோக்கியமான விடயம் அல்ல என்று அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
குடிவரவு அதிகாரிகள்
இதனையடுத்து ஜனாதிபதி- செயலகத்துக்கு சிரேஸ்ட குடிவரவு அதிகாரிகள் இந்த விடயம் தொடர்பில் பதிலளித்துள்ளனர்.
பணிகளில் உள்ள குடிவரவு அதிகாரிகள் தமது பணிகள் நிறைவடைந்ததும், அங்கிருந்து அகலும்போது புதிய குழுவொன்று தாமதமாகவே கடமைகளுக்கு வருவதே இதற்கான காரணம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனவே இந்த நிலைமையை தடுக்க, குடிவரவு அதிகாரிகளுக்குப் புதிய சுற்றறிக்கை விரைவில் வெளியிடப்பட உள்ளது.
இதன்படி மாற்றுத் அலுவலர்கள் தயாராகி, உடனடியாக கடமையைப் பொறுப்பேற்க, அவர்கள் பக்கத்தில் காத்திருக்கும் வரை, பணிகளை நிறைவு செய்தவர்கள் தமது ஆசனங்களை விட்டு வெளியேறக் கூடாது என்று இந்த சுற்றறிக்கை அறிவுறுத்துகிறது.