ஆபாச படங்களில் நடித்து காட்சிகளை இணையத்தில் பதிவு செய்த இளம் தம்பதியொன்று ராகம காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளது.
சுற்றுவட்டாரப் பகுதிகளில் வசிப்பவர்களிடமிருந்து பெறப்பட்ட முறைப்பாடுகளின் அடிப்படையிலேயே இந்த தம்பதியினர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைது நடவடிக்கை
சம்பவம் தொடர்பில் சந்தேகநபர்களிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் போது, ஆரம்பத்தில் வெல்லம்பிட்டியில் வசித்து வந்ததாகவும் பின்னர் ராகமவில் உள்ள குறித்த பெண்ணின் தாயார் வீட்டில் வைத்து இணைத்தில் ஆபாச படங்களை பதிவேற்றி பணம் சம்பாதித்து வந்துள்ளது தெரியவந்துள்ளது.
வேலையின்றி வாடகை வாகனங்களில் பயணித்து வெளியில் உள்ள விடுதிகளில் உணவு, பானங்களை ஆர்டர் செய்து காலத்தை கடத்தும் இந்த தம்பதியினரின் சந்தேகத்திற்குரிய நடத்தை காரணமாக, அவர்கள் பயன்படுத்திய சாதனங்களுடன் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மேலதிக விசாரணை
இந்நிலையில், ராகம தம்புவ பிரதேசத்தை சேர்ந்த 19 மற்றும் 24 வயதுடைய இளம் தம்பதியரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.