Loading...
யாழ். மாவட்டத்தில் டெங்கு தொற்றாளர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாக வைத்தியசாலை தரப்பில் தெரிவிக்கப்படுகின்றது.
யாழ்ப்பாண போதனா வைத்தியசாலையில் நேற்று (24.12.2023) மதியம் வரையான காலப்பகுதியில் 130 நோயாளர்கள் டெங்கு தொற்றுக்கு உள்ளாகி சிகிச்சை பெற்று வருகின்றனர்.
சில வாரங்களாக நோயாளர் அதிகரிப்பு
கடந்த சில வாரங்களில் டெங்கு நோயாளிகளின் எண்ணிக்கை சடுதியாக அதிகரித்துள்ளது.
Loading...
இதனால், யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் டெங்கு நோயாளர்களுக்கென தற்காலிகமாக இரண்டு விடுதிகள் திறந்து வைக்கப்பட்டுள்ளது.
எனவே இதை கவனத்திற்கொண்டு டெங்கு காய்ச்சல் குறித்து எச்சரிக்கையாக இருக்குமாறு சுகாதார தரப்பு பொது மக்களை கேட்டுக்கொண்டுள்ளது.
Loading...