பண மோசடியில் ஈடுபடுவதாக இலங்கைக்கு சுற்றுலா வந்த ருமேனிய தம்பதி தொடர்பான தகவல் வெளியாகியுள்ளது.
8 நாள் பயணமாக இலங்கை வந்துள்ள தம்பதியினர் ஹட்டனிலுள்ள ஹோட்டலில் தங்கியுள்ளனர்.
அங்கு பெண் தான் மசாஜ் செய்துக் கொள்ள விரும்புவதாகவும், அந்த நேரத்தில் தனக்கு ஒரு ஆணின் சேவை வேண்டும் என்று ஹோட்டல் நிர்வாக அதிகாரியிடம் தெரிவித்தார்.
பொலிஸில் முறைப்பாடு
இதன்படி மசாஜ் திணைக்கள ஊழியர் ஒருவர் சேவையை வழங்கியதுடன், பின்னர் குறித்த பெண் மசாஜ் சேவையை வழங்கிய நபர் தன்னை துஷ்பிரயோகம் செய்ய முயற்சித்ததாக ஹோட்டல் நிர்வாக அதிகாரிக்கு அறிவித்துள்ளார்.
இது குறித்து பொலிஸில் முறைப்பாடு செய்ய ஹோட்டல் அதிகாரிகள் தயாரான போது, பொலிஸ் முறைப்பாடு தேவையில்லை எனவும், இலங்கையில் உள்ள சட்டத்தரணி ஒருவரிடம் சம்பவம் தொடர்பில் எழுத்து மூலமான கடிதத்தை சான்றளிக்குமாறும் கோரப்பட்டுள்ளது.
தொடர்ந்து நடத்தப்பட்ட விசாரணையில், அந்நாட்டில் இருந்து காப்பீட்டுத் தொகையையும், இந்த நாட்டுக்கு வந்த விமான டிக்கெட்டுக்கான பணத்தையும் பெற்றுக்கொள்ளும் நோக்கில், தான் இந்த மோசடியை செய்ததாக வாக்குமூலம் அளித்தது தெரியவந்தது.