Loading...
ஆங்கில புத்தாண்டு பிறப்பிற்கு இருப்பது இன்னும் ஐந்து நாட்களே . இதனால் சென்னையை சுற்றிலும் பொலிஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. சென்னையில் உள்ள நட்ச்சத்திர ஹோட்டல்கள் , விடுதிகள் என்பன கொண்டாட்ங்களுக்கு தயாராகி வருகின்றன.
மெரினா கடற்கரை , பெசன்நகர் கடற்கரை என்பனவற்றுக்கு அதிகளவான மக்கள் வருகை தருவார்கள் என்ற காரணத்தினால் பொதுமக்கள் கடைபிடிக்க வேண்டிய பல பாதுகாப்பு வழிமுறைகள் வகுக்கப்பட்டுள்ளன.
Loading...
சென்னை மாநகர பொலிஸாரினால் 31 ஆம் திகதி இரவு 20,000 ஆயிரம் பொலிஸார் கடமையில் ஈடுபடுத்தப்படவுள்ளனர். மேலும் பெண்கள் , சிறுவர்கள் தொடர்பாக கூடுதல் கவனம் செலுத்தியுள்ளனர். ட்ரோன் மூலமும் கண்காணிப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Loading...