சந்தோஷத்தை வரவழைத்துக் கொள்ள சண்முகநாதரை வழிபட வேண்டிய நாள். முன்னேற்றத்திற்கு மாற்றினத்தவர்கள் ஒத்துழைப்புச் செய்வர். திருமணப் பேச்சுக்கள் நல்ல முடிவிற்கு வரும்.
முன்னேற்றம் அதிகரிக்க முருகப்பெருமானை வழிபட வேண்டிய நாள். முக்கியப் புள்ளிகள் இல்லம் தேடிவருவர். கொடுக்கல்– வாங்கல்களை ஒழுங்குபடுத்திக் கொள்ள முன்வருவீர்கள்.
விரோதிகள் விலகிச் செல்லும் நாள். அரசு வழியில் எதிர்பார்த்த சலுகைகள் கிடைக்கும். கொடுத்த வாக்கைக் காப்பாற்ற கொள்கைப் பிடிப்பைக் கொஞ்சம் தளர்த்திக் கொள்வீர்கள்.
மகிழ்ச்சி பெருக மயில்வாகனத்தானை வழிபட வேண்டிய நாள். போன்மூலம் பொன்னான தகவல் வந்து சேரும். பொதுவாழ்வில் மதிப்பும், மரியாதையும் உயரும். வெளிநாட்டு அனுகூலம் உண்டு.
துணிவும், தன்னம்பிக்கையும் கூடும் நாள். அரசியல்வாதிகளால் ஆதாயம் கிடைக்கும். நண்பர்கள் உங்களின் முன்னேற்றத்திற்கு உறுதுணை புரிவர். திட்டமிட்ட காரியம் திட்டமிட்டபடியே நடைபெறும்.
எதிரிகள் உதிரியாகும் நாள். விரயங்கள் கூடும். வீடுமாற்றம் பற்றிச் சிந்திப்பீர்கள். குடும்பத்தில் ஏற்பட்ட கருத்துவேறுபாடுகள் அகலும். தொழில் கூட்டாளிகளின் ஒத்துழைப்பு ஆச்சர்யப்படவைக்கும்.
ஆதாயத்தைவிட விரயங்கள் கூடும் நாள். சிரித்துப் பேசும் நண்பர்களால் சில சிக்கல்கள் ஏற்படலாம். மறதியால் சில பணிகளைச் செய்ய விட்டுவிடுவீர்கள். உடல் நலனில் கவனம் தேவை.
காரிய வெற்றிக்கு கந்தப் பெருமானை வழிபட வேண்டிய நாள். வருமானம் திருப்தி தரும். பயணங்களால் பலன்கிடைக்கும். வி.ஐ.பி.க்கள் வீடு தேடி வருவர். புதிய ஒப்பந்தங்கள் வந்து சேரும்.
உத்தியோக முயற்சியில் அனுகூலம் கிடைக்கும் நாள். பழைய பாக்கிகள் வசூலாகிப் பரவசப்படுத்தும். தொழில் போட்டிகள் அகலும். அடுத்தவர்களுக்காக எடுத்த முயற்சிகளில் ஆதாயம் கிடைக்கும்.
கவலைகள் தீரக் கார்த்திகேயனை வழிபட வேண்டிய நாள். நண்பர்கள் நல்ல தகவலைக் கொண்டு வந்து சேர்ப்பர். உத்தியோகத்தில் உயரதிகாரிகளின் பாராட்டுக்களைப் பெறுவீர்கள்.
பணத் தேவைகள் பூர்த்தியாகும் நாள். தொழில் வளர்ச்சி பெருக அனுபவமிக்கவர்களின் ஆலோசனைகளைக் கேட்பீர்கள். பழைய வாகனத்தை மாற்றிப் புதிய வாகனத்தை வாங்கும் எண்ணம் உருவாகும்.
தன்னம்பிக்கைகூடும் நாள். தனவரவு திருப்திதரும். அக்கம் பக்கத்து வீட்டாரின் ஆதரவு கிடைக்கும். தொழில் ரீதியாக புதிய திட்டமொன்றைத் தீட்டுவீர்கள். நூதனப் பொருள் சேர்க்கை உண்டு.