இந்தோனேசியாவில் சீன நிறுவனமொன்றுக்கு சொந்தமான நிக்கல் தொழிற்சாலையில் எரி உலை வெடித்துச் சிதறி ஏற்பட்ட விபத்தில் 18 உயிரிழந்துள்ளனர்.
குறித்த விபத்தில் 9 இந்தோனேசிய தொழிலாளா்களும், 4 சீன தொழிலாளா்களும் உயிரிழந்ததாக அறிவிக்கப்பட்டிருந்தது.
இந்த நிலையில், விபத்தில் காயமடைந்த மேலும் 5 போ் சிகிச்சை பலனின்றி வைத்தியசாலையில் உயிரிழந்ததை தொடா்ந்து இதில் பலியானவா்களின் எண்ணிக்கை 18ஆக உயா்வடைந்துள்ளது.
அதிகரித்த எண்ணிக்கை
சீனாவின் வா்த்தக வழித் தட திட்டத்தின் ஒரு பகுதியாக, இந்தோனேசியாவின் சுலாவெசி பகுதியில் பல நிக்கல் தொழிற்சாலைகளை சீன நிறுவனங்கள் நடத்தி வருகின்றன.
மோரோவாலி பகுதியில் அமைந்துள்ள அத்தகைய தொழிற்சாலை ஒன்றின் எரி உலை அண்மையில் வெடித்துச் சிதறியதிலே இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.
மேலும், நிக்கல் வளம் நிறைந்த சுலாவெசி மாகாணத்தில் ஏற்கெனவே 2 தொழிற்சாலைகளில் விபத்து ஏற்பட்டு 4 போ் உயிரிழந்ததுள்ளதாகவும் கூறப்படுகிறது.