சமீபத்தில் லண்டனைச் சேர்ந்த நாடக நடிகர் மைக்கேல் கார்செல் மும்பை வந்தார். அவரை சுருதிஹாசன் விமான நிலையத்தில் வரவேற்று அழைத்து வந்தார். இருவரும் ஜோடியாக நின்ற படங்கள் இணைய தளங்களில் வெளியாகின.
இருவரும் காதலர்கள் என்றும் ‘கிசுகிசு’ கிளம்பியது. காதலர் தினத்தை கொண்டாடுவதற்காகத்தான் கார்செல் மும்பை வந்தார் என்றும் தகவல் வெளியாகின.
ஆனால் சுருதிஹாசன் இதை கண்டு கொள்ளவில்லை. விரைவில் லண்டனில் நடைபெற இருக்கும் இசை நிகழ்ச்சியில் சுருதிஹாசன் பங்கேற்கிறார். அது பற்றிய ஏற்பாடுகள் செய்வதற்காக சுருதிஹாசனுடன் ஆலோசிப்பதற்காக அவர் மும்பை வந்தார் என்றும் சொல்லப்பட்டது.
இதுபற்றி கூறிய சுருதிஹாசன், “மற்றவர்கள் கணிப்புகள் குறித்து கவலை இல்லை. நான் அதுபற்றி எதுவும் கருத்து தெரிவிக்க மாட்டேன். இதுவரை யாரையும் காதலிக்கவில்லை” என்று கூறி இருந்தார்.
தற்போது, கமல்ஹாசன் இந்தியா – பிரிட்டன் கலாச்சார நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக லண்டன் சென்றுள்ளார். அவரை சுருதிஹாசனின் நண்பர் மைக்கேல் கார்செல் சந்தித்துள்ளார். கமலுடன் அவர் நிற்கும் படம் சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி வருகிறது.
இதனால் மகள் திருமணம் பற்றி லண்டன் நடிகர் மைக்கேல் கார்செல்லுடன் பேசுவதற்காக அவரை கமல் சந்தித்து இருப்பாரோ என்று இணைய தளங்களில் பலர் கருத்து தெரிவித்து வருகிறார்கள்.