Loading...
மத்திய பிரதேச மாநிலத்தில் குணா-ஆரோன் வீதியில் தனியார் பேருந்தொன்று எதிரே வந்த லொறியொன்றின் மீது மோதி தீப்பற்றி எரிந்ததில் 12 பேர் உயிரிழந்துள்ளனர்.
சுமார் 30 பயணிகளுடன் பயணித்த பஸ்ஸொன்றே இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளது. இவ்விபத்தில் 12 பேர் சம்பவ இடத்திலேயே உடல் கருகி உயிரிழந்துள்ளனர் எனவும் 12 பேர் படுகாயமடைந்த நிலையில் வைத்திய சாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Loading...
இந்நிலையில் மத்திய பிரதேச முதலமைச்சர் மோகன் யாதவ், உயிரிழந்தவர்களுக்கு இரங்கல் தெரிவித்ததுடன், அவர்களது குடும்பத்தினருக்கு தலா 4 லட்சம் ரூபாயும், காயம் அடைந்தவர்களுக்கு 50 ஆயிரம் ரூபாயும் வழங்கப்படும் எனவும் அறிவித்துள்ளார்.
மேலும், இவ்விபத்து குறித்து தீவிர விசாரணை நடத்துமாறும் உத்தரவிட்டுள்ளார்.
Loading...