ஒரு மாத காலமாக புதுக்குடியிருப்பு மக்கள் சுழற்சி முறையிலான உணவுத் தவிர்ப்புப் போராட்டத்தில் ஈடுபட்டுவரும் நிலையில் முதற்கட்டமாக ஏழரை ஏக்கர் காணி மக்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
இதன்படி இன்று காலை அம்மக்கள் தமது சொந்தக் காணிகளுக்குள் செல்வதற்கு அனுமதியளிக்கப்பட்டுள்ளது.
புதுக்குடியிருப்புப் பிரதேசத்தில் 19 குடும்பங்களுக்குச் சொந்தமான 49 ஏக்கர் காணிகளிலிருந்து இராணுவத்தினர் வெளியேறவேண்டுமெனக் கோரி கடந்த பெப்ரவரி 2ஆம் நாளிலிருந்து புதுக்குடியிருப்பு பிரதேச செயலர் அலுவலகத்திற்கு முன்னால் மக்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர்.
கடந்த 2ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்ட குறித்த பேராட்டம், 14ஆம் திகதி முதல் சுழற்சி முறையிலான உண்ணாவிரதப் போராட்டமாக மாற்றம் பெற்றது. இருப்பினும் இன்னும் இரண்டு கட்டங்களாக காணிகள் விடுவிக்கப்படும் என அரசாங்கத்தினால் உறுதியளிக்கப்பட்டிருக்கின்றமையும் குறிப்பிடத்தக்கது.