கிளிநொச்சி மாவட்டத்தில் டெங்கு தொற்று கண்டறியப்பட்டுள்ளதாக கிளிநொச்சி மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் தெரிவித்துள்ளார்.
கிளிநொச்சி மாவட்ட செயலகத்தில் நேற்று (28.12.2023) இடம் பெற்ற மாவட்ட ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தின் சுகாதாரம் தொடர்பான கலந்துரையாடலின் போதே இவ்விடயம் எடுத்துக் கொள்ளப்பட்டது.
15 டெங்கு தொற்றாளர்கள்
கிளிநொச்சி மாவட்டத்தில் இருந்து வெளி மாவட்டங்களுக்கும், குறிப்பாககொழும்பு மற்றும் யாழ்ப்பாணம் ஆகிய இடங்களில் பல்கலைக்கழக கல்வி மற்றும் தொழில் நிமித்தம் சென்று திரும்பிய 15 பேர் இடையே டெங்கு தொற்று அடையாளம் காணப்பட்டிருக்கின்றது.
எனினும், கிளிநொச்சி மாவட்டத்தில் இதுவரை எந்த இடங்களில் டெங்கு நோயாளர்கள் அடையாளம் காணப்படவில்லை.
அத்துடன் கிளிநொச்சி மாவட்டத்தின் பல்வேறு இடங்களிலும் விழிப்புணர்வு செயற்பாடுகள் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் சுகாதார சேவைகள் பணிப்பாளர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.