Loading...
பிரபல இயக்குநரான சீமான் தற்போது அரசியலில் தீவிரமாக கவனம் செலுத்தி வருகிறார். `பாஞ்சாலங்குறிச்சி’ என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான சீமான் இதுவரை 5 படங்களை இயக்கியுள்ளார். கடைசியாக அவர் இயக்கத்தில் மாதவன் நடித்த அதிரடி திரைப்படமான `தம்பி’ வெளியானது. அதன் பின்னர் அரசியலில் தீவிர கவனம் செலுத்தி வரும் சீமான் விடுதலை சிறுத்தைகள் கட்சியையும் நிர்வகித்து வருகிறார்.
இந்நிலையில், கடந்த 2010-ஆம் ஆண்டில் விஜய்யை வைத்து `பகலவன்’ என்ற படத்தை சீமான் இயக்கவிருந்தார். இப்படத்தை கலைப்புலி எஸ்.தாணு தயாரிக்க உள்ளதாகவும் கூறப்பட்டது. மேலும் அப்படத்திற்கான முதற்கட்ட பணிகளும் தொடங்கி நடைபெற்று வந்த நிலையில், அந்த படம் குறித்த அடுத்தடுத்த தகவல்கள் வெளியாகாமல் அதற்கான பணிகள் கிடப்பில் போடப்பட்டது.
Loading...
இந்நிலையில், `பகலவன்’ படத்தின் பணிகளை சீமான் மீண்டும் தொடங்க உள்ளதாக கூறப்படுகிறது. மேலும் இந்த படத்தில் விஜய்க்கு பதிலாக விஜய் ஆண்டனி நடிக்க உள்ளதாகவும் கூறப்படுகிறது. இதுகுறித்த அதிகாரப்பூர்வ தகவல்கள் விரைவில் வெளியிடப்பட உள்ளதாகவும் கூறப்படுகிறது.
Loading...