Loading...
ஹயஸ் வாகனமும் முச்சக்கர வண்டியும் நேருக்கு நேர் மோதி இடம்பெற்ற விபத்தில் சிறுவன் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் இருவர் படுகாயமடைந்துள்ளனர்.
இந்தச் சம்பவம் கம்பஹா மாவட்டம் மீரிகமை பிரதேசத்தில் நேற்று (29.12.2023) இரவு 8.30 மணியளவில் இடம்பெற்றுள்ளது.
விபத்து தொடர்பில் மேலும் தெரியவருகையில்,
Loading...
சாரதி கைது
முச்சக்கர வண்டியில் பயணித்த நீர்கொழும்பு பிரதேசத்தைச் சேர்ந்த நான்கு வயது சிறுவனே சம்பவத்தில் உயிரிழந்துள்ளார்.
அவருடன் பயணித்த 38 வயதுடைய தந்தையும், 47 வயதுடைய முச்சக்கர வண்டி சாரதியும் படுகாயங்களுடன் மீரிகமை ஆதார வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில், 27 வயதுடைய ஹயஸ் வாகனத்தின் சாரதியைக் கைது செய்துள்ள பொலிஸார், விபத்து தொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
Loading...