திருகோணமலை கோமரங்கடவல பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் 17 வயது சிறுமியிடம் தவறான முறையில் நடந்துகொண்ட சந்தேகநபரை எதிர்வரும் ஜனவரி 08ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு திருகோணமலை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
நேற்றையதினம் (30.12.2023) திருகோணமலை சந்தேகநபரை நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்திய போதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளவர் கோமரங்கடவல பகுதியைச் சேர்ந்த 27 வயதுடைய இளைஞர் என பொலிஸார் தெரிவித்தனர்.
வைத்திய பரிசோதனை
குறித்த சிறுமி ஆடை ஒன்றினை தைப்பதற்காக அருகிலுள்ள கடைக்கு சென்றுள்ளார்.
இதன்போது கடையில் குறித்த இளைஞர் இருந்ததாகவும் புதிய ஆடையை தைத்து தருவதாக கூறி சிறுமியை தைத்து தரும் வரை இருக்குமாறு கூறியதாகவும் சற்று நேரத்தின் பின் கடையை மூடிவிட்டு சிறுமியிடம் தவறான முறையில் நடந்துகொண்டதாகவும் பொலிஸாரின் ஆரம்ப கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
பாதிக்கப்பட்ட குறித்த சிறுமி வைத்திய பரிசோதனைக்காக திருகோணமலை பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.