Loading...
கொழும்பின் புறநகர் பகுதியில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த தாய், மகன் மற்றும் மகள் விஷம் அருந்தி உயிரிழந்துள்ளனர்.
மாலம்பே – கஹந்தோட்டையில் கடந்த சில நாட்களுக்கு முன்னர் தந்தையும் விஷம் அருந்தி உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
உயிரிழந்த தாய்க்கு 35 வயதெனவும், மகனுக்கு 10 வயதெனவும், மகளுக்கு 9 வயதெனவும் தெரியவந்துள்ளது.
Loading...
குடும்பமாக மரணம்
இவர்களது தந்தையும் கடந்த சில தினங்களுக்கு முன்னர் விஷம் அருந்தி உயிரை மாய்த்துக் கொண்டதாகவும், நேற்று அவரது ஏழு நாள் நினைவு தானம் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
தந்தை இறந்த சோகத்தில் இரண்டு பிள்ளைகளுடன் தாயும் உயிரை மாய்த்திருக்கலாம் என பொலிஸார் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.
Loading...