Loading...
மாத்தறை சிறைச்சாலையில் மேலும் ஒரு கைதி உயிரிழந்துள்ளதாக சிறைச்சாலையின் ஊடகப்பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
வலஸ்முல்ல பிரதேசத்தை சேர்ந்த 53 வயதுடைய நபரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
மாத்தறை வைத்தியசாலையில் காய்ச்சல் காரணமாக தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் அவர் உயிரிழந்துள்ளார்.
Loading...
மூளை காய்ச்சல் உறுதி
இதேவேளை மாத்தறை சிறைச்சாலையில் நோய்வாய்ப்பட்ட கைதிகளிடமிருந்து பெறப்பட்ட உயிரியல் மாதிரியில் மூளை காய்ச்சல் உறுதி செய்யப்பட்டிருந்நமையும் குறிப்பிடத்தக்கது.
இதனை பொரளை மருத்துவ ஆராய்ச்சி நிறுவனம் உறுதிப்படுத்தியுள்ளதாக சிறைச்சாலைகள் சுகாதார பணிப்பாளர் கலாநிதி ஹேமந்த ரணசிங்க தெரிவித்திருந்தார்.
Loading...