Loading...
2022 ஆம் ஆண்டுடன் ஒப்பிடும் போது இந்த வருடம் நத்தார் பண்டிகைக் காலத்தில் கேக் விற்பனை பாரியளவில் குறைந்துள்ளதாக அகில இலங்கை பேக்கரி உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து சங்கத்தின் தலைவர் என்.கே. ஜெயவர்தன, 2023ல் கேக் விற்பனை குறைந்தது 50 சதவீதம் குறைந்துள்ளதாக கூறியுள்ளார்.
Loading...
விலை அதிகரிப்பு
சீனி, முட்டை மற்றும் இதர மூலப்பொருட்களின் விலை சடுதியாக அதிகரித்து வருவதே இந்த நிலைக்கு காரணம் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
அதுமட்டுமல்லாமல், 1 கிலோகிராம் பச்சை மிளகாயின் விலை அசாதாரணமாக நிலையில் உயர்வடைந்து தற்போது ரூ. 1,000 மற்றும் ரூ. 1,300 இற்கு விற்பனை செய்யப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
Loading...