முன்னாள் தமிழக முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் இன்னும் சில மாதங்களில் காணாமல் போய் விடுவார் என அ.தி.மு.கவின் துணை பொதுச் செயலாளர் டி.டி.வி.தினகரன் தெரிவித்துள்ளார்.
அ.தி.மு.கவில் இருந்து பன்னீர்செல்வத்துடன் இணைந்து கொண்ட சிலர் மீண்டும் அ.தி.மு.கவில் இணைந்த கொண்ட நிகழ்வு நேற்று (வெள்ளிக்கிழமை) கட்சி தலைமையகத்தில் இடம்பெற்றது. இதன்போது, கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.
முன்னாள் முதலைச்சர் எம்.ஜி.ஆர் மறைவிற்கு பின்னர் பி.எச் பாண்டியன் கட்சியில் பல்வேறு சதி வேலைகளை செய்திருந்தாரெனவும் அவர் தற்போது பன்னீர்செல்வத்தோடு இணைந்து சதி வேலையில் ஈடுப்பட்டுள்ளதாகவும் குற்றம் சுமத்தினார்.
மேலும், அ.தி.மு.க எனும் இயக்கத்தை அழிப்பதற்காக முன்னாள் முதலமைச்சர் பன்னீர்செல்வம் சதி செய்வதாகவும் அந்த சதி திட்டங்கள் எல்லாம் தவிடு பொடி ஆகும் எனவும் குறிப்பிட்டார்.
இவ்வாறான சதித் திட்டங்களை செய்ய முயற்சிக்கும் பன்னீர்செல்வத்தின் அணியினர் இன்னும் சில மாதங்களில் காணாமல் போவார்கள் எனவும் எச்சரிக்கை விடுத்தார்.