Loading...
யாழ்ப்பாண சுன்னாகப் பகுதியில் கசிப்புடன் இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த கைது நடவடிக்கையானது நேற்றையதினம் (30.12.2023) சுன்னாகம் பொலிஸாரால், சுன்னாகம் பேருந்து நிலையத்தில் வைத்து முன்னெடுக்கப்பட்டது.
கைது செய்யப்பட்டவர் ஆனைக்கோட்டை பகுதியைச் சேர்ந்த 24 வயது இளைஞன் ஆவார்.
Loading...
மேலதிக விசாரணை
இதன்போது சந்தேகநபரிடம் இருந்து 7500 மில்லிலீட்டர் கசிப்பு மீட்கப்பட்டுள்ளது.
அதேவேளை, மேலதிக விசாரணைகளை மேற்கொண்ட பின்னர் சந்தேக நபரை மல்லாகம் நீதிமன்றத்தில் முற்படுத்துவதற்கான நடவடிக்கைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
Loading...