ஒவ்வொருவருக்கும் ஆயிரத்தோரு தனிப்பட்ட அபிலாஷைகள் இருந்தாலும், அனைத்திலும் வெற்றியடைவதற்கு தாய்நாட்டை தற்போதைய நெருக்கடி நிலையிலிருந்து உயர்த்த வேண்டியது மிகவும் அவசியமானது என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
பிறந்திருக்கும் 2024 ஆம் ஆண்டுக்கான வாழ்த்து செய்தியிலேயே இதனை கூறியுள்ளார்.
பொருளாதாரத்தை ஸ்திரப்படுத்தும் வகையில், இந்த வருடமும் பூக்கள் நிறைந்த பாதை சுமூகமான பாதையாக இல்லாமல் சவாலான கடினமான பயணமாக அமையும் என ஜனாதிபதி சுட்டிக்காட்டியுள்ளார்.
நாட்டுக்கான பொறுப்பு
“கடந்த வருடத்தில் மக்களின் அர்ப்பணிப்பு மற்றும் கஷ்டங்கள் காரணமாக நாட்டை வங்குரோத்து நிலையில் இருந்து மீட்பதில் வெற்றியடைய முடிந்தது.
அனைத்து இலங்கையர்களுக்கும் பொறுப்பு காணப்படுகிறது. நாட்டை மீளக் கட்டியெழுப்புவதற்கான பொறுப்பு சரியாக அங்கீகரிக்கப்பட வேண்டும்.
ஜனவரி மாதம் ஜானஸ் என்ற கடவுளின் பெயரால் சூட்டப்பட்டது. ஜானஸ் கடவுளுக்கு முன்பக்கம் மட்டுமல்ல, பின்பக்கமும் பார்க்க இரண்டு முகங்கள் இருக்கின்றது.
நாட்டுக்கான அந்தப் பொறுப்புக்களை நிறைவேற்றுவதற்கும் தாய்நாட்டை மீண்டும் எழுப்பும் சவாலை வெற்றிகொள்வதற்கும் புத்தாண்டில் தீர்மானம் எடுக்குமாறும் ஜனாதிபதி விசேட அறிக்கையொன்றில் மக்களை வலியுறுத்தியுள்ளார்.