Loading...
தமிழகத்தின் புதிய வரவு செலவு திட்டம் தொடர்பான அமைச்சரவை விவாதம், தலைமைச் செயலகத்தில் உள்ள அமைச்சரவை கூட்ட மண்டபத்தில் நடைபெற்றது.
புதிய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் நேற்று (வெள்ளிக்கிழமை) மாலை 4.40 மணிமுதல் 6.40 மணிவரை இடம்பெற்றது.
இந்த கூட்டத்தின் போது, தமிழகத்தின் புதிய வரவு செலவு திட்டம், துறைகளுக்கான ஒதுக்கீடுகள், தாக்கல் செய்யப்பட வேண்டிய சட்ட மசோதாக்கள் தொடர்பிலும் வாதிடப்பட்டது.
Loading...
அத்துடன், அரசு சார்பில் எதிர்க்கட்சிகளுக்கு அளிக்கவேண்டிய பதில்கள் குறித்தும், அரசியல் நிகழ்வுகள் தொடர்பில் விவாதிக்கப்பட்டுள்ளது.
எடப்பாடி பழனிச்சாமி முதலமைச்சராக பதவியேற்ற பின்னர் நடத்தப்பட்ட முதலாவது அமைச்சரவை கூட்டம் இது என்பதும் குறிப்பிடத்தக்கது.
Loading...