Loading...
பெப்ரவரி மாதம் முதல் பாடசாலை போக்குவரத்து கட்டணத்தை அதிகரிக்க அகில இலங்கை பாடசாலை சிறுவர் போக்குவரத்து சங்கம் தீர்மானித்துள்ளது.
பாடசாலை ஆரம்பிக்கும் போதே இந்த சதவீதம் குறித்து பெற்றோருக்கு அறிவிக்கப்படும் என சங்கத்தின் லலித் பெர்னாண்டோ தெரிவித்தார்.
வற் வரி அதிகரிப்பு
இன்று (01) முதல் புதிய வற் வரி திருத்தம் நடைமுறைப்படுத்தப்படுவதால் எரிபொருள் மற்றும் வாகன உதிரிபாகங்களின் விலையும் அதிகரிக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.
Loading...
இதன் காரணமாக பாடசாலை போக்குவரத்துக் கட்டணங்கள் நிச்சயமாக அதிகரிக்கப்பட வேண்டும் எனவும் தெரிவித்தார்.
இதேவேளை, பேருந்து மற்றும் முச்சக்கரவண்டி கட்டணங்களும் அதிகரிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Loading...