நாட்டில் வரி விலக்கு ஏற்பட்டிருந்த நிலையில் தற்போதைய வரி விதிப்பு என்பது பொருளாதார ரீதியில் பாதிக்கப்பட்டுள்ள மக்களை பல்வேறு அசௌகரியங்களுக்கு உள்ளாக்கியுள்ளது என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்துள்ளார்.
மேலும், தற்போதைய வரி விதிப்பை ஏற்றுக்கொள்ள முடியாது எனவும், இவ்விடயம் தொடர்பில் அரசாங்கம் உடனடியாக கவனம் செலுத்த வேண்டும் எனவும் வலியுருத்தியுள்ளார்.
மன்னாரில் உள்ள அலுவலகத்தில் நேற்று (01.01.2024) மதியம் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போது அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
அரசாங்கத்தின் வரி விதிப்பு
அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில்,
“வரி விதிப்பு என்பது நாட்டின் வளர்ச்சிக்கு என்பதில் எமக்கு மாற்றுக் கருத்து இல்லை. ஆனால் தற்போது நாட்டில் ஏற்பட்டுள்ள அசாதாரண சூழ்நிலை நிமித்தம் குறித்த வரி நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.
மக்களின் அன்றாட வாழ்க்கையில் ஈவினையின்றி செயல்படுவதை ஏற்றுக்கொள்ள முடியாது.
இனப்பிரச்சினைக்கான தீர்வு
மக்களின் பொருளாதாரத்தில் இருந்து இந்த வரி விலக்கு நடைமுறைபடுத்தப்பட்டிருக்கின்றமை தேவையற்ற ஒரு விடயமாக காணப்படுகிறது.
இந்த வருடத்திலாவது அரசாங்கம் இந்த வரி விதிப்பை மிக குறைவான மதிப்பீடு கொள்ள வேண்டும் என எதிர்பார்க்கப்பட்டது.
மேலும் இனப்பிரச்சினைக்கான தீர்வையும் அரசாங்கம் நடைமுறைக்கு வரும் வகையில் செயல்படுத்தப்பட வேண்டும்” என்றார்.