பொதுமக்கள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் இன்று முதல் மூன்று வீதத்தினால் அதிகரிக்கப்பட்டுள்ள பெறுமதி சேர் வரி தொடர்பில் விரிவான கலந்துரையாடலை மேற்கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
அனைத்து ஊடக நிறுவனங்களுக்கும் நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய இன்று (1.1.2024) இது குறித்து பகிரங்க அழைப்பு விடுத்துள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில், வற் வரி என்பது ஒரு சிக்கலான தலைப்பாகும், எனினும் அதை சாதாரணமாக எடுத்துக் கொண்ட மக்களுக்கு விளக்க வேண்டும்.
புதிய வற் வரி
எவ்வாறாயினும், வற் வரி தொடர்பான அனைத்து வர்த்தமானி அறிவித்தல்களையும் எதிர்வரும் வியாழன் (4) க்குள் வெளியிடுவதற்கு எதிர்பார்க்கப்படுவதாக அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
புதிய வற் வரி விதித்த பின்னர் அனைத்து நுகர்வுப் பொருட்களிலும் சிறிதளவு அதிகரிப்பு இருக்கும், ஆனால் சில பொருட்களுக்கு வெற் வரி சேர்க்கப்படவில்லை என்பது மிகத் தெளிவாக உள்ளது.
எனினும் அதற்கு சிலர் தவறான விளக்கங்களை அளித்துள்ளனர் என்று அமைச்சர் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார்.
அரிசி, அரிசி மா, குழந்தை பால், கோதுமை, கோதுமை மா, ரொட்டி, மருந்து, ஆயுர்வேத மருந்து, போக்குவரத்து சேவைகள், கல்வி சேவைகள், அடக்கம் மற்றும் தகனம், ஊன்றுகோல் போன்ற மருத்துவ உபகரணங்கள் வற் வரிக்கு கீழ் வராது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.