எல்லோரும் சேர்ந்து வரி கட்டுகிறோம். எதிர்காலத்தில் அனைவரும் வரி கட்டும் போது நாங்கள் செலுத்தும் வரியின் அளவு குறையும் என நிதி அமைச்சின் செயலாளர் மகிந்த சிறிவர்தன தெரிவித்துள்ளார்.
ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய நேர்காணலின் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
இது ஒரு கடினமான கால கட்டம்
தொடர்ந்தும் தெரிவிக்கையில்,
அனைவரும் ஒன்றிணைந்து முறையாக வரி செலுத்தினால் பல பிரச்சினைகளுக்கு தீர்வு காண முடியும். தற்போதைய கால கட்டம் கடினமான ஒரு கால கட்டம்.
மாத சம்பளத்தை ஒரேயடியாக கொடுக்க முடியாத காலம் இருந்தது. அவ்வளவு கஷ்டமான காலம். டொலர்கள் இல்லாமல் துறைமுகத்தில் கப்பல்கள் முடங்கின. அந்த நிலையை போக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது.
நாங்கள் அமைத்த அடித்தளம் வருங்காலத்தில் வலுப்பெறும். நானும் கஷ்டமான காலத்தை அனுபவித்து வருகிறேன்.
என் மகன் வரி விதிப்பு பற்றி என்னிடம் குறை கூறினான். அவ்வளவு வரி செலுத்த நான் என்ன தவறு செய்தேன் என்று கேட்டேன். நான் சொன்னேன், உன் பிரச்சனை எனக்கு புரிகிறது என தெரிவித்தேன்.
ஆனால் நாட்டில் பிரச்சனை உள்ளது. அந்த பிரச்சனையில் இருந்து மீள்வது நம் கடமை. எல்லோரும் சேர்ந்து வரி கட்டுகிறோம். எதிர்காலத்தில் அனைவரும் வரி கட்டும் போது நாங்கள் செலுத்தும் வரியின் அளவு குறையும் என குறிப்பிட்டார்.