Loading...
ஜப்பானில் 379 பேருடன் பயணித்த விமானமொன்று திடீரென தீப்பிடித்து எரிந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இன்று (02) டோக்கியோவில் ஹனேடா விமான நிலையத்தின் ஓடுதளத்தில் தரையிறங்கும்போதே குறித்த விமானம் தீப்பிடித்து எரிந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்போது ஒடுதளத்திலும் தீ பரவியுள்ளது.
Loading...
இதேவேளை குறித்த விமானம் தரையிறங்கும்போது அங்கிருந்த மற்றொரு விமானத்தில் மோதி இந்த விபத்து ஏற்பட்டிருக்கலாம் எனவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்நிலையில் குறித்த விமானத்தில் பயணித்த அனைவரும் பத்திரமாக வெளியேற்றப்பட்டுள்ளனர் எனவும், இது குறித்த விசாரணைகள் இடம்பெற்று வருவதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
Loading...