Loading...
மலர்ந்திருக்கும் 2024 ஆம் ஆண்டின் முதல் குழுவாக 100 இலங்கை இளைஞர்கள் தென் கொரியாவில் தொழில் வாய்ப்புக்கள் நிமிர்த்தம் செல்லவுள்ளதாக வெளிநாட்டு வேலை வாய்ப்பு பணியகம் தெரிவித்துள்ளது.
தென்கொரியாவில் வேலை வாய்ப்பு பெற்ற 832 ஆவதாக விளங்கும் இந்த குழுவிற்கு உற்பத்தி துறையில் வேலை கிடைத்துள்ளது.
Loading...
புரிந்துணர்வு உடன்படிக்கை
இந்த வேலை வாய்ப்புக்களானது இலங்கை அரசாங்கத்திற்கும் தென் கொரிய அரசாங்கத்திற்கும் இடையிலான புரிந்துணர்வு உடன்படிக்கையின் பிரகாரமே கிடைக்கப்பெற்றுள்ளது.
கடந்த 2023 ஆம் ஆண்டில் 6412 இலங்கையர்கள் தென் கொரியாவில் வேலைக்காகச் சென்றுள்ளதாக இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகம் மேலும் தெரிவித்துள்ளது.
Loading...