பாரிய வர்த்தகர்கள் மற்றும் தொழிலதிபர்களை வரி வலையில் சிக்க வைப்பதற்காக உள்நாட்டு இறைவரி திணைக்களத்தில் தனிப் பிரிவு ஸ்தாபிக்கப்பட்டுள்ளதென திறைசேரி செயலாளர் மகிந்த சிறிவர்தன தெரிவித்துள்ளார்.
இந்த பிரிவு High Net-worth Costumers Unit என்று அழைக்கப்படுகிறது.
நேற்று இடம்பெற்ற விசேட கலந்துரையாடலின் போதே செயலாளர் இதனை குறிப்பிட்டுள்ளார்.
வரி ஏய்ப்பு
பாரியளவிலான வர்த்தகர்கள், தனிநபர்கள் மற்றும் செல்வந்தர்கள் வரி ஏய்ப்பு செய்வதை தடுப்பதற்கு என்ன நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன என்ற கேள்விக்கு பதிலளிக்கும் போதே திறைசேரி செயலாளர் மகிந்த சிறிவர்தன மேற்கண்டவாறு தெரிவித்தார்.
“உள்நாட்டு வருவாய் திணைக்களத்தில் Large tax Payer Unit உள்ளது. சமீபத்தில் நாங்கள் Large tax Payer Unit என்று ஒன்றைத் தொடங்கினோம்.
திறைசேரி செயலாளர்
நீங்கள் கூறுவதனை போன்ற குழுக்களை குறி வைப்பதற்காகவே இந்த பிரிவு அமைக்கப்பட்டுள்ளது.
நாடு பெற வேண்டிய வரியை அந்த மக்களிடமிருந்தும் பெறுவதை உறுதி செய்யும் வகையில் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன” என திறைசேரி செயலாளர் மகிந்த சிறிவர்தன மேலும் தெரிவித்துள்ளார்.