இஸ்ரேலில் வான் வழித்தாக்குதலால் டெய்ர் எல்-பலா பகுதியில் உள்ள ஒரே குடும்பத்தை சேர்ந்த 15 பேர் கொல்லப்பட்டுள்ளனர்.
அத்துடன் காசா பகுதியில் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 207 பேர் உயிரிழந்துள்ளதுடன் 338 பேர் காயமடைந்துள்ளனர்.
குறித்த தகவலை காசா சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.
கல்வித்துறை அமைச்சகம்
இஸ்ரேல் – ஹமாஸுக்கு இடையேயான போரில் மிகப்பெரும் இழப்பை காசாவும் பலஸ்தீன மக்களும் சந்தித்து வருகின்றனர்.
இதுவரை 21,978 பலஸ்தீன மக்களை இஸ்ரேல் கொலை செய்துள்ளதாக காசாவின் சுகாதர அமைச்சகம் தெரிவித்துள்ளது.
மேலும், 4,156 மாணவர்கள் இஸ்ரேல் தாக்குதலால் கொல்லப்பட்டதாகவும், 381 பள்ளிகளை இஸ்ரேல் அழித்துள்ளதாகவும் பலஸ்தீன கல்வித்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
திட்டமிட்ட கொலை
இந்நிலையில், இஸ்ரேல் சிறையில் மேலுமொரு பலஸ்தீனக் கைதி உயிரிழந்துள்ளார். இது திட்டமிட்ட கொலை என பலஸ்தீன அமைப்புகள் குற்றம் சாட்டியுள்ளன.
போர் ஆரம்பித்ததிலிருந்து இதுவரை 7 கைதிகள் இஸ்ரேல் சிறையில் உயிரிழந்துள்ளனமை குறிப்பிடத்தக்கது.