வடக்கு மக்களுக்கு நீங்கள் வழங்கிய வாக்குறுதியை மறந்திருப்பீர்கள் என்று நான் நினைக்கவில்லை. இருந்தாலும் மீண்டும் நினைவுபடுத்த விரும்புவதாக இலங்கை தமிழரசுக் கட்சியின் தலைவரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் உறுப்பினருமான மாவை சேனாதிராஜா தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி தேர்தலின் போது தங்கள் வழங்கிய வாக்குறுதிகளில் முதலில் ஆக்கிரமிப்புக்குள்ளான காணிகளை விடுவிப்பது தொடர்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
இருப்பினும் கடந்த முறை வருகைதந்த போது 6 மாதங்களில் காணிகளை விடுவிப்பதாக கூறி இருந்தாலும் இன்றும் மக்கள் போராடிக்கொண்டு இருப்பதாக அவர் தெரிவித்தார்.
மேலும் தென் இலங்கையில் இருப்பவர்கள் இப்படியான ஒரு போர் சூழலில் இருக்கவில்லை, ஆகவே அவர்களுக்கு வழங்கப்படுவதை போன்று இல்லாமல் வடக்கு தமிழ் மக்களுக்கு உடனடியாக பல்வேறு விடயங்களை பெற்றுத்தருமாறு ஜனாதிபதியிடம் கோரியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
மேலும் அதனை தொடர்ந்து பல்வேறு காலை நிகழ்வுகள் இடம்பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
தமிழ் மக்கள் உங்கள் மீது நம்பிக்கை இழந்து வரும் நிலையில் மிகவும் நம் பிக்கையுடனும் கனத்த மனதுடனும் உங்களை சந்திக்கிறேன். உங்களது ஆட்சிகாலத்திலும் தமிழ் மக்கள் பெற் றிருக்கும் நன்மைகள் மிக மிக கொஞ்சமே என தமிழரசு கட்சியின் தலை வரும் நாடாளுமன்ற உறுப்பினருமா ன மாவை சேனாதிராஜா ஐனாதிபதி முன்னிலையில் கூறியுள்ளார்.
“ஐனாதிபதியிடம் தெரிவிக்க” அலுவலகம் திறப்பு விழா இன்றைய தினம் வடமாகாண ஆளுநர் அலுவலகத்தில் இன்று காலை திறந்து வைக்கப்பட்ட து. இந்நிகழ்வில் கலந்துகொண்டு உ ரையாற்றும்போதே மாவை சேனாதி ராஜா மேற்கண்டவாறு கூறியுள்ளார்.
நிகழ்வில் மேலும் அவர் உரையாற்றுகையில், பட்டதாரி மாணவர்கள் வெளியே கவனயீர்ப்பு போராட்டத்தை நடத்தி வருகின்றனர்.
30 வருடங்களாகள் மோசமான போரினால் பாதிக்கப் பட்ட பட்டதாரிகள் இன்றைக்கு பட்டப்படிப்பை நிறைவு செய்த பின்னரும் வேலைவாய்ப்பு இல்லாமல் இருக்கின்றனர்.
இதேபோல் படையினரின வசம் உள்ள காணிகள் விடுவிக்கப்படும் எனக் கூறியிருந்தீர்கள். மேலும் காணாமல் போனவர்கள் தொடர்பாக எந்தவொரு நடவடிக்கையும் இல்லை.
மேலும், தமிழ் அரசியல் கைதிகள் விடுதலை யும் இல்லை. எனவே மக்கள் உங்கள் மீது நம்பிக்கை இழந்திருக்கும் நிலையில் நாம் மிகுந்த நம்பிக்கையுடனும் கனத்த மனதுடனும் உங்களை சந்திக்கிறேன்.
உங்களுடைய ஆட்சி காலத்திலும் நாங்கள் மிக மிக சிறிய அளவிலான நன்மைகளையே பெற்றிருக்கிறோம். இதேபோல் ஜ.நா மனித உரிமைகள் ஆணையகத்தில் அதன் ஆணையாளர் தீர்மானம் ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த தீர்மானம் முழுமையாக நடைமுறைப்படுத்தப்படவேண்டும்.
அப்படி நடைமுறைப்படுத்தப்படும்போதே இலங்கையில் இனங்களுக்கிடையில் உண்மையான நல்லிணக்கம் உண்டாகும் என்றார்.