கருப்பு உளுந்தில் கால்சியம், பாஸ்பரஸ், பொட்டாசியம் நார்ச்சத்து இரும்புச் சத்துக்கள் அதிகம் உள்ளன.
கருப்பு உளுந்து கொண்டு செய்யப்பட்ட உணவுகளை சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் அடிக்கடி சாப்பிட்டு வந்தால் உடலில் எலும்புகள், மூட்டுகளின் வலிமை மேலும் அதிகரிக்கும்.
கருப்பு உளுந்தை பயன்படுத்தி ஆரோக்கியமான மற்றும் சுவையான கருப்பட்டி கஞ்சி எப்படி செய்வது என்று பார்க்கலாம்.
- கருப்பு உளுந்து- 1 கப்
- பச்சரிசி- 1/4 கப்
- கருப்பட்டி- 3/4 கப்
- துருவிய தேங்காய்- 1 கைப்பிடி
- ஏலக்காய் தூள்- 1 ஸ்பூன்
- முந்திரி- 10
- திராட்சை- 10
- நெய்- 3 ஸ்பூன்
செய்முறை
முதலில் ஒரு பாத்திரத்தத்தில் கருப்பு உளுந்தை சேர்த்து மிதமான தீயில் வைத்து பொன்னிறமாக வறுத்து எடுத்துக்கொள்ளவும்.
பின் அதே பாத்திரத்தத்தில் பச்சரிசி சேர்த்து மிதமான தீயில் வைத்து பொரிந்து வரும்வரை வறுத்து எடுத்துக்கொள்ளவும்.
இது நன்கு ஆறியதும் ஒரு மிக்ஸி ஜாரில் சேர்த்து கொரகொரப்பாக அரைத்து எடுக்கவும்
அடுத்து அரைத்த உளுந்து மற்றும் அரிசியை அளந்து ஒரு பாத்திரத்தத்தில் போட்டு தண்ணீர் ஊற்றி கலந்தது எடுக்கவும்
பின் ஒரு பாத்திரத்தில் ஒரு கப் மாவிற்கு ஒன்றரை கப் தண்ணீர் என்கின்ற அளவிற்கு ஊற்றி கொதித்து வரும்பொழுது கரைத்த மாவை சேர்த்து நன்றாக கிளறவும்.
நன்கு இறுகி வந்ததும் இதில் தூசி இல்லாத கருப்பட்டி அல்லது நாட்டுச்சர்க்கரை சேர்த்து நன்றாக கலக்கவும் . தொடர்ந்து இதில் ஏலக்காய் தூள், தேங்காய் சேர்த்து நன்றாக கலக்கவும்.
கடைசியாக நெய்யில் தாளித்த முந்திரி, திராட்சை சேர்த்து கலந்து இறக்கினால் சுவை நிறைந்த ஆரோக்கியமான கருப்பு உளுந்து கருப்பட்டி கஞ்சி தயார்.