இந்தியாவில் UPI பண பரிவர்த்தனைகளில் செய்யப்பட்டுள்ள பல்வேறு மாற்றங்கள் ஜனவரி முதலாம் திகதி முதல் நடைமுறைக்கு வந்துள்ளன.
யுபிஐ பரிவர்த்தனை
தற்போதைய காலத்தில் நாம் பணம் பரிமாற்றத்துக்கு வங்கிகளுக்கு செல்ல வேண்டிய தேவை இல்லை. நாம் வீட்டில் இருந்தபடியே கையில் இருக்கும் மொபைல் மூலம் பணத்தை அனுப்பிக் கொள்ளலாம். முக்கியமாக யுபிஐ வந்தபிறகு பணப்பரிமாற்றத்துக்கு இன்னும் இலகுவாகி விட்டது
கூகுள் பே, பேடிஎம், போன்பே என எந்த யுபிஐ முறை என்றாலும் மக்கள் அதனை இன்று பயன்படுத்தி வருகின்றனர். எங்கு சென்றாலும் துணிக்கடை முதல் டீக்கடை வரை UPI மூலம் தான் பணம் செலுத்துகின்றனர். அந்த அளவிற்கு வேகமாக அசுர வளர்ச்சி அடைந்துள்ளது.
கணக்குகள் நீக்கம்
கடந்த ஒரு வருடமாக யுபிஐ பரிவர்த்தனையை உபயோகப் படுத்தாமல் வைத்திருக்கும் வாடிக்கையாளர்களுக்கு UPI ID நீக்கப்படும். அதேபோல, செயல்பாட்டில் இல்லாத மொபைல் எண்களுடன் தொடர்புடைய யுபிஐ ஐடி (UPI ID) நீக்கப்படும். டிஜிட்டல் முறையில் நடத்தப்படும் பரிவர்த்தனைகளை பாதுகாக்க இந்த நடவடிக்கை மேட்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
வரம்பு அதிகரிப்பு
UPI மூலம் தினசரி பரிவர்த்தனை செய்யப்படும் உச்சவரம்பு ஒரு லட்சம் ரூபாயாக உள்ளது. மருத்துவமனை மற்றும் கல்வி நிறுவனங்களுக்கான உச்சவரம்பு ரூ.5 லட்சமாக அதிகரிக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பை ஏற்கனவே வெளியிட்ட நிலையில் தற்போது நடைமுறைக்கு வந்துள்ளது.
1.1% பரிமாற்ற கட்டணம்
Online wallets போன்ற பிரீபெய்டு பேமண்ட் கருவிகளை (PPI) பயன்படுத்தி சில வணிகர்கள் செய்யப்படும் யுபிஐ பரிவர்த்தனை ரூ.2,000-க்கும் மேல் இருந்தால் 1.1% பரிமாற்ற கட்டணம் பிடித்தம் செய்யப்படும்.
இது வாடிக்கையாளர்களுக்கு பிடித்தம் செய்யப்படாது, வணிகர்களுக்கு மட்டுமே பிடித்தம் செய்யப்படும்.
ரிசர்வ் வங்கியானது ஜப்பானின் ஹிட்டாச்சி நிறுவனத்துடன் இணைந்து நாடு முழுவதும் UPI ATM -களை திறக்க உள்ளது. இதன் மூலம் OR code ஸ்கேன் செய்தாலே பணத்தை எடுக்க முடியும்.
ரூ.2,000 மேல்..
UPI மூலம் ஒருவருக்கு நீங்கள் பணம் அனுப்பும்போது, முதல் முறையில் ரூ.2 ஆயிரம் மேல் அனுப்ப முடியாது என்ற புதிய விதி விரைவில் அமலுக்கு வரும் என தகவல் வெளியாகியுள்ளது.
நீங்கள் முதல்முறை பணம் அனுப்பிய 4 மணி நேரத்திற்கு பிறகே கூடுதல் தொகை அனுப்ப முடியும் என்ற புதிய கட்டுப்பாடுகளுடன் வரவுள்ளது. இது தொடர்பான அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகாத நிலையில், விரைவில் வெளியாகலாம் என கூறப்படுகிறது.