நடிகர் விஜயகாந்த், அரசியலில் கால்பதித்து கேப்டனாக கலக்கியவர் இப்போது எம்முடன் இல்லை.
அவர் இருக்கும் போது அவரைப் பற்றி பேசியதை விட இறந்த பிறகு நிறைய விஷயங்கள் கேப்டனை பற்றி மக்களும், பிரபலங்களும் பேசியபடி உள்ளனர்.
தினசரி விஜயகாந்த் செய்த உதவி குறித்து வெளியே வருகிறது, அவர் மட்டும் உடல்நிலையில் ஆரோக்கியத்துடன் இருந்திருந்தால் அரசியலில் சாதித்திருப்பார் என ரஜினிகாந்த் கூட கூறியிருந்தார்.
இப்படிபட்ட ஒரு தலைவன் இன்று நம்முடன் இல்லை,இது தமிழ் மக்களுக்கு அவரது இறப்பு பெரிய சோகத்தை கொடுத்துவிட்டது. தற்போது விஜயகாந்த் படத்தில் நடித்த ஒரு நடிகையின் தற்போதை புகைப்படம் ஒன்று சமூக வலைதளங்களில் வலம் வருகிறது, யார் அவர் என்பதை பார்ப்போம்.
விஜயகாந்த் நடிப்பில் 1984ம் ஆண்டு வெளியாகி திரைக்கு வந்த திரைப்படம் வைதேகி காத்திருந்தாள். வெள்ளசாமி என்ற அழுத்தமான ரோலில் விஜயகாந்த் நடிக்க ரேவதி, கவுண்டமணி, செந்தில், பரிமளம், ராதாரவி, வடிவுக்கரசி, கோவை சரளா என பலரும் நடித்திருந்தனர்.
இந்த படத்தில் வெள்ளைச்சாமியின் முறைப்பெண்ணான வைதேகி என்ற கதாபாத்திரத்தில் கன்னட நடிகை பரிமளா நடித்திருந்தார், ஒருசில காட்சிகளே நடித்திருந்தாலும் மக்கள் மனதில் அழுத்தமாக பதிந்துள்ளது.
கன்னட நடிகையான இவரின் புகைப்படம் அண்மையில் இணையத்தில் வெளியாகி இருக்கிறது. இவரின் மகள் மேக்னா ராஜும் ஒரு நடிகை தானாம், மறைந்த கன்னட நடிகர் சிரஞ்சீவி சார்ஜாவின் மனைவியும் ஆவார்