Loading...
எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் ரணில் விக்ரமசிங்க போட்டியிட்டால் அவருக்கு பொதுஜன பெரமுனவின் ஆதரவு கிடைக்கும் என இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம தெரிவித்துள்ளார்.
கண்டியில் ஊடகங்களுக்கு கருத்து வெளியிடும் போதே இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம இவ்வாறு கூறியுள்ளார். இவ்விடயம் தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில்,
“பொதுஜன பெரமுனவின் பெரும்பான்மையான உறுப்பினர்களின் ஆதரவுடன் ரணில் விக்ரமசிங்க ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டார்.
Loading...
ஆகவே எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் அவருக்கு ஆதரவளிப்பதில் கட்சிக்கு எந்த பிரச்சினையும் இருக்காது.
நாடு தற்போது பொருளாதார ரீதியாக மீண்டு வருகிறது. அதற்கான பெருமை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கே வழங்கப்பட வேண்டும்” என அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
Loading...