சொத்துகுவிப்பு வழக்கின் குற்றவாளிகளான சசிகலா, இளவரசி மற்றும் தினகரன் ஆகியோர் தங்களது அபராதத்தொகையை எப்படி கட்டுவது என்று தெரியாமல் முழித்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
சொத்துக்குவிப்பு வழக்கு விவகாரத்தால் நீதிமன்றம் இளவரசு, சசிகலா மற்றும் தினகரன் உள்ளிட்டோருக்கு ரூ.10 கோடியை அபராதமாக செலுத்த வேண்டும் என கூறியிருந்தது.
அவர்களுக்கு இது எல்லாம் ஒரு அபாராதமும் இல்லை, பணத்திற்கும் பஞ்சம் இல்லை. ஆனால் அவர்களிடம் இருக்கும் பணம் எதுவும் முறையாக இல்லை என்று கூறப்படுகிறது.
சசிகலா குடும்பத்தின் தொழில் அனைத்தும் பினாமிகளை வைத்தே நடத்தப்படுவதாக கூறப்படுகிறது.
இந்நிலையில் இந்த மூன்று பேரும் சேர்த்து ரூ.30 கோடியை நீதிமன்றத்தில் செலுத்தினால், உடனடியாக வருமான வரித்துறை வந்து வாசலில் நிற்கும் எனவும் அந்த பணம் எப்படி வந்தது என்ற கணக்கை கேட்டு கேள்வி எழுப்பும் என்றும் கூறப்படுகிறது.
அவர்களுக்கு முறையான கணக்கை கூற வேண்டி வரும். எனவே, என்ன செய்வது, எப்படி அந்த அபராதத் தொகையை செலுத்துவது என்று சசிகலா, அவரின் கணவர் நடராஜன், தினகரன் ஆகியோர் தங்கள் வழக்கிறிஞர்கள் மற்றும் ஆடிட்டர்களிடம் ஆலோசனை செய்து வருவதாக கூறப்படுகிறது.
அபாரதத் தொகையை கட்டினால் வருமானத் துறை, கட்டாவிடில் மேலும் ஒரு ஆண்டு சிறை தண்டனை அனுபவிக்க வேண்டும். என்ன செய்வதென்று தெரியாமல் சசிகலா தரப்பு உள்ளதாக கூறப்படுகிறது.