தினமும் தோசை கேட்பவர்களுக்கு ஒரே தோசை செய்து கொடுக்காமல் வித்தியாசமாக மரவள்ளிகிழங்கு தோசை செய்து கொடுக்கலாம்.
இந்த கிழங்கில் மா சத்தும், நார்ச்சத்தும் அதிகமாக இருக்கின்றதனால் . இது காலையில் பசியை கட்டுபடுத்தி சிறந்த செரிமானத்தை உண்டுபண்ணும் .
அவ்வாறான மரவள்ளிகிழங்கு தோசை செய்வது எப்படி என்பதனை பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்
- உழுந்தம் பருப்பு – கால்கோப்பை
- இட்லி அரிசி – 2 கப்கோப்ப
- பச்சரிசி – கால் கோப்பை
- மரவள்ளிக்கிழங்கு (தோல் நீக்கி துண்டுகளாக நறுக்கியது)- 1 கோப்பை
- சீரகம் – 1 தேக்கரண்டி
- மிளகு – 1 தேக்கரண்டி
- சோம்பு – 1 தேக்கரண்டி
- வரமிளகாய் – காரத்துக்கேற்ப
- பெருங்காயம் – அரை தேக்கரண்டி
- உப்பு ,நல்லெண்ணெய் , கொத்துமல்லி, கறிவேப்பிலை – தேவயானஅளவு
1.இட்லி அரிசி, பச்சரிசி, உளுத்தம் பருப்பு ஆகியவற்றை ஊற வைத்து நன்றாக அரைம்து கொள்ளவும்.
2. பாதி அரைத்து கொண்டிருக்கும் பொழுது மரவள்ளிக்கிழங்கு துண்டுகளை சேர்த்து அரைத்து எடுக்கவும். அதனுடன் வரமிளகாய் தேவயானஅளவு சேர்த்து கொள்ள வேண்டும்.
3. அரைத்த மாவுடன் ரவை கலந்து சரியாக 8 மணி நேரம் மூடி வைக்கவும்.
4. பின்னர் சீரகம், மிளகு, சோம்பு, பெருங்காயம், உப்பு, கறிவேப்பிலை, கொத்துமல்லித்தழை தூவி சேர்த்து நன்றாக கலக்கி 1 மணி நேரம் நன்றாக ஊறவிடவும்.
5.தோசையில் வெங்காயம், காய்கறிகள் அல்லது வேறு ஏதாவது மசாலாக்களும்அளவுக்குகேற்பசேர்த்து கொள்ளலாம்.
இறுதியாக தோசைக்கல்லை சூடாக்கி தோசையை ஊற்றி இறக்கினால் சுவையாக மரவள்ளிகிழங்கு தோசை தயார்.