ஆடைத்தொழிற்சாலை ஒன்றில் ஜோர்டானில் பணிபுரியும் இலங்கையர்கள் பலர், தம்மை மீண்டும் தாய் நாட்டிற்கு அழைத்துவர அரசாங்கம் தலையிட வேண்டுமென கூறி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர் .
தாங்கள் ஜோர்டானில் தங்குவதற்கு விசா கூட இல்லை என அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
250க்கும் மேற்பட்ட இலங்கையர்கள் ஜோர்டான் நாட்டிற்கு ஆடைத் தொழிலுக்காகச் சென்றபோதும் குறைந்தபட்ச வசதிகள் கூட இன்றி பலவந்தமாகத் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக குற்றம் சுமத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
தாம் பணிபுரியும் அசில் யுனிவர்சல் என்ற ஆடைத் தொழிற்சாலையின் அதிகாரிகள் தமக்கு உரிய சம்பளத்தை வழங்குவதில்லையெனவும், இலங்கைக்கு மீண்டும் திரும்புவததற்கு இடமளிப்பதில்லை எனவும் அவர்கள் மேலும் கூறுகின்றனர் .
அதோடு தமக்கு முறையான சம்பளம் வழங்கவும், நாட்டுக்கு திரும்புவதற்கான வாய்ப்பை வழங்கவும் அரசாங்கம் இதில் தலையிட வேண்டுமென அவர்கள் கோரிக்கை அளித்துள்ளனர்.
தாங்கள் கடந்த பல வருடங்களாக ஜோர்டானில் தங்கியிருப்பதாகவும் பலரது விசா முடிவடைந்துள்ளதாகவும் அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.