இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தனின் ஆலோசனையின் பேரில் மயிலத்தமடுவில் பொலிஸ் காவலரன் அமைக்கப்பட்டமையால் பண்ணையாளர்கள் பெரும் சிரமத்திற்கு ஆளாவதாக தெரிவிக்கப்படுகிறது
மயிலத்தமடுவில் பொலிஸ் காவலரன் அமைத்தால் கால்நடை பண்ணையாளர்களின் பிரச்சினைக்கு தீர்வு கண்டுவிடலாம் என மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்தி குழு கூட்டத்தில் மட்டக்களப்பு மாவட்ட இராஜாங்க அமைச்சர் சந்திரகாந்தன் தீர்மானம் ஒன்றை எடுத்து இருந்தார்.
அதற்கு பல எதிர்ப்புகள் வந்திருந்தபோதிலும் குறித்த தீர்மானத்தின் அடிப்படையில் கடந்த மாதம் மயிலத்தமடு பகுதியில் பொலிஸ் காவலரன் ஒன்று அமைக்கப்பட்டு இருந்ததமை குறிபிடதக்கதாகும்.
இப்போது அத்துமீறிய பயிற்செய்கையாளர்களுக்கு ஆதரவாக அங்குள்ள பொலிஸ் காவலரன் செயற்படுவதாகவும்கடந்தகாலங்களில் மேய்ச்சல் தரையாக பயன்படுத்திய இடங்களில் கால்நடைகளை மேய்க்கவிடாமல் குறிப்பிட்ட வட்டாரத்திற்குள் அவற்றை பராமரித்துகொள்ளுமாறு பொலிஸார் அறிவுறுத்தல் விடுத்துள்ளனர்.
கால்நடைகளுக்காக மேய்ச்சல் தரையாக பயன்படுத்தப்பட்ட நிலத்தில் அத்துமீறிய குடியேற்றவாசிகள் விவசாயம் செய்வதற்க்கு ஆதரவு வழங்கும் விதத்தில் இந்த செயற்பாடு அமைந்துள்ளது. பொலிஸ் காவலரன் ஒன்று அமைத்தால் அத்துமீறிய குடியேற்ற வாசிகளுக்கு பாதுகாப்பு வழங்கலாம் என்ற எண்ணத்தில் பிள்ளையான் குறித்த நடவடிக்கையை மேற்கொண்டாரா என்ற கேள்வி தற்போது பண்ணையாளர்கள் மத்தியில் எழுந்துள்ளது.
மேய்ச்சல் நிலம் தொடர்பாக பொய்யான வாக்குறுதிகளை வழங்கி வந்த பிள்ளையான் இலங்கை பேரினவாத அரசாங்கத்துடன் ஒன்றிணைந்து தமிழர்களது பூர்வீக கனிகளையும் கால்நடைகள் நிலங்களையும் பண்ணையாளர்களது வாழ்வாதாரத்திலும் தனது அரசியல் காழ்ப்புணர்ச்சியை காட்டியுள்ளமை தெள்ளதெளிவாக விளங்குவதாக பாதிக்கப்பட்ட பண்ணையாளர்கள் கூறியுள்ளனர்.
பண்ணையாளர்களுகென்று அமைக்கப்பட்ட பொலிஸ் காவலரன் இன்று பண்ணையாளருக்கு எதிராக மாறி நிற்கும் துயரம் எழுந்துள்ளதாக குறிப்பிடுகின்றனர்.
பொலிஸ்காவலரன் அமைத்ததன் பின் அதிகளவான கால்நடைகள் கடத்தப்பட்டும் சுடப்பட்டும் வெட்டப்பட்டும் கொலை செய்யப்பட்டுள்ள எராளமான சம்பவங்கள் பதிவாகியுள்ளன. வழமை போன்று பிள்ளையான் தனது இரட்டை முகத்தை பண்ணையாளர்கள் விடியத்திலும் காட்டி உள்ளார் என்று பாதிக்கப்பட்ட பண்ணையாளர்கள் தெரிவித்துள்ளனர்.