Loading...
கிளிநொச்சி மாவட்டத்தில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் விடுதலையையும் வெளிப்படுத்தலையும் வலியுறுத்தி காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களhல் மேற்கொள்ளப்பட்டு வரும் கவனயீர்ப்பு போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து இன்று சனிக்கிழமை கிளி நகர் பொது அமைப்புக்கள் ஒன்றிணைந்து கவனயீர்ப்பு பேரணி ஒன்றை நடாத்தியுள்ளனர்.
கிளிநகர் கிராம அபிவிருத்திச் சங்கம் மாதர் கிராம அபிவிருத்திச் சங்கம் சனசமூநிலையம், என்பன ஒன்றிணைந்து இன்று சனிக்கிழமை காலை கிளிநொச்சி நகர் சித்திவிநாயகர் ஆலய முன்றிலிருந்து பேரணியாக மாவட்டச் செயலகம் வரை சென்று அங்கு ஜனாதிபதிக்கான மகஜரை மேலதிக அரசாங்க அதிபர் சத்தியசீலினிடம் கையளித்தனர். தொடர்ந்து வடக்கு மாகாண முதலமைச்சர் மற்றும் எதிர் கட்சி தலைவர் ஆகியோருக்கான மகஜரை வடக்கு மாகாண சபை உறுப்பினர் பசுபதிபிள்ளையிடம் கையளித்தனர்.
தொடர்ந்து மாவட்டச் செயலகத்திலிருந்து ஏ9 வீதி ஊடாக காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களால் கவனயீர்ப்பு போராட்டம் மேற்கொள்ளப்பட்டு வருகின்ற கிளிநொச்சி கந்தசுவாமி ஆலய முன்றலுக்குச் சென்று அவர்களுக்குஆதரவாக போராட்டத்தில் கலந்துகொண்டனர்.
காணி விடுவிப்பு, காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கு தீர்வு அரசியல் கைதிகளின் விரைவான விடுதலை போன்றவற்றை வலியுறுத்தியே கிளிநகர் பொது அமைப்புகள் இந்த கவனயீரப்பு பேரணியை மேற்கொண்டிருந்தனர்.
Loading...