மீண்டும் சீமெந்து மூடை ஒன்றின் விலை 300 ரூபாவிற்கு மேல் அதிகரிக்கப்பட்டுள்ளதாக தேசிய கட்டுமான தொழிலாளர் சங்கம் தெரிவித்துள்ளது.
நேற்றைய தினம் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக்கொண்ட தேசிய கட்டுமானத் தொழிற்சங்கத்தின் செயலாளர் சுபுன் அபேசேகர இதனை தெரிவித்துள்ளார்.
நாட்டின் பொருளாதார சிக்கலுக்கு மத்தியில், கட்டுமானத் துறையை ஓரளவு வளர்ச்சியடையும் வேளையில், சீமெந்தின் விலையுயர்வு, மோசமான பாதிப்பை ஏற்படுத்தும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
அதன்போது, சீமெந்தின் விலை மீண்டும் ஒருமுறை அதிகரிக்கப்பட்டுள்ளமை நியாயமற்றது என அபேசேகர தெரிவித்துள்ளார்.
அத்துடன், சீமெந்துக்கு 3 வீத பெறுமதிசேர் வரியே விதிக்கப்பட வேண்டும என்றும் ஆனால் தற்போது 18 வீதம் பெறுமதிசேர் விதிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்நிலையில்,இதற்கு முன்னராகவே சீமெந்தின விலை 150 ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ளதாக அறிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.