நாட்டின் பணத்தில் இருந்து 250 மில்லியன் ரூபா செலவளித்து கடற்படையின் கடற்படை கப்பலை ஹூதி கிளர்ச்சிக் குழுவினரை ஒடுக்குவதற்காக அனுப்ப அரசாங்கம் தீர்மானித்தது என்பது பிரச்சினைக்குரிய விடயம் என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றத்தில் இன்றையதினம் இடம்பெற்ற அமர்வில் கலந்து கொண்டு கருத்து வெளியிடும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அமெரிக்கா, இந்தியா போன்ற பலம் வாய்ந்த நாடுகள் இருக்கும் போது ராஜபக்சவின் புத்திரர் ரொக்கட்களை ஏவி வங்குரோத்தடையச் செய்த இந்நாட்டில், இவ்வாறான செயற்பாடுகள் இடம்பெறுவது மேலும் நாட்டை வங்குரோத்தடையச் செய்யவா என்றும் அவர் கேள்வி எழுப்பினார்.
நாட்டில் பாடசாலைக்குச் செல்லும் பிள்ளைகளுக்கு தினசரி உணவுத் தேவைகளை பூர்த்தி செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இளைஞர்கள் மற்றும் நுண், சிறிய மற்றும் நடுத்தர வர்த்தகர்கள் மற்றும் தொழில்முனைவோர் துயரத்தில் இருக்கின்றனர்.
220 இலட்சம் பேரும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதுடன், பாரிய அளவில் வேலையின்மை தலைவிரித்தாடுகின்றது.
இவ்வாறான வேளையில், நாட்டின் பணத்தில் இருந்து 250 மில்லியன் ரூபா செலவளித்து கடற்படையின் கடற்படை கப்பலை ஹூதி கிளர்ச்சிக் குழுவினரை ஒடுக்குவதற்காக அனுப்ப அரசாங்கம் தீர்மானித்தது என்பது பிரச்சினைக்குரிய விடயம்.
நாட்டின் அத்தியாவசிய உள்ளக நடவடிக்கைகளுக்காக இருக்கும் பணம் ஹூதி கிளர்ச்சி குழுவினரை ஒடுக்குவதற்கு அனுப்பப்படும் வகையில் ,நாட்டின் கடனில் இருந்து குறைந்தது 25 பில்லியனையாவது குறைப்பதாக வெளிநாடுகள் உறுதியளித்துள்ளனவா என்பதை நாம் அறிய விரும்புகின்றோம்.
இதனால் என்ன பலன் என்று கேள்வி எழுப்புவதாகவும் எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.
ஜனாதிபதி தலைமையிலான இந்த அரசாங்கம் இந்நாட்டு மக்கள் படும் இன்னல்களை புரிந்து கொள்ளாது, சிறு குழந்தை முதல் கர்ப்பிணி தாய்மார்கள், பாடசாலை மாணவர்கள், இளைஞர்கள் வரை சகரும் மிகவும் நிர்க்கதி நிலையில் உள்ளனர். இந்தப் பணம் நாட்டின் அத்தியாவசியப் பொருட்களுக்கு ஏன் செலவிடப்படவில்லை.
அமெரிக்கா, இந்தியா போன்ற பலம் வாய்ந்த நாடுகள் இருக்கும் போது ராஜபக்சவின் புத்திரர் ரொக்கட்களை ஏவி வங்குரோத்தடையச் செய்த இந்நாட்டில், இவ்வாறான செயற்பாடுகள் இடம்பெறுவது மேலும் நாட்டை வங்குரோத்தடையச் செய்வதற்காகவா என்பது பிரச்சினைக்குரிய விடயம் என குறிப்பிட்டுள்ளார்.