இன்று பெரும்பாலான நபர்கள் நவ ரத்தின கற்களினால் ஆன நகைகளை அணிவதை வழக்கமாக வைத்துள்ளனர். ஆனால் சிலர் தங்களது ராசிக்கு ஏற்ப ரத்தின கற்களை வைத்து நகைகளை அணிந்து கொள்கின்றனர்.
இவ்வாறு பலராலும் விரும்பப்படும் நவ ரத்தின கற்களின் தரத்தினை எவ்வாறு கண்டறிவது என்பதை இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்வோம்.
முத்து – நுரையற்ற பாலில் போட்டால் மிதக்கும்.
மரகதம் – கையில் வைத்துக்கொண்டு குதிரை அருகே சென்றால் குதிரை தும்மும்.
பச்சைக்கல் – குத்து விளக்கு ஒளியின் முன்பு சிவப்பு நிறமாக தோன்றும்.
வைரம் – சுத்தமான வைரத்தை ஊசியால் குத்தினால் உடையாது.
பவளம் – உண்மையான பவள மையத்தில் ஊசியால் குத்தினால் மட்டுமே இறங்கும்.
கோமேதகம் – பசுவின் நெய்யில் போட்டால் குங்குமப்பூ வாசனை வரும்.
புஷ்ப ராகம் – சந்தனம் அரைக்கும் கல்லில் வைத்தால் தாமரை பூ வாசனை வரும்.
வைடூரியம் – பச்சலை சாற்றில் போட்டால் வெள்ளை நிறமாக மாறும்.
நீலக்கல் – பச்சிலை சாற்றில் போட்டால் ஒருவித ஒலி வரும்.
குறித்த விபரங்கள் அகத்தியரின் பாடல்களிலிருந்து தொகுக்கப்பட்டுள்ள மிக அரியதாகும். இதனை தெரிந்து கொண்டு இனிவரும் நாட்களில் நவரத்தின கற்களின் தரத்தை தெரிந்து கொள்ளலாம்.