பொதுவாக மருத்துவர்களால் விரைவில் குணப்படுத்த முடியாத சில நோய்களை உணவுகள் சரிச் செய்கிறது.
அந்த வகையில் மூட்டுவலி, சளி பிரச்சினை இவற்றை இலகுவாக முடக்கத்தான் கீரையை சரிச் செய்கின்றது.
இந்த கீரையில் கால்சியம், வைட்டமின் சத்துக்கள் அதிகமாக இருக்கின்றது. இதனால் இவை தலைமுடி, சருமம் தொடர்பான பிரச்சினைகளையும் சரிச் செய்கின்றது.
இதன்படி, முடக்கத்தான் கீரை தோல் வியாதியுள்ளவர்களுக்கு சிறந்த நிவாரணத்தை கொடுகின்றது.
இப்படியான பிரச்சினையுள்ளவர்கள் முடக்கத்தான் கீரையை நன்றாக மை போல் அரைத்து கொண்டு அதை சொறி, சிரங்கு போன்ற தோல் வியாதிகள் இருக்கும் இடங்களில் பற்று வைத்து வந்தால் தடம் தெரியாமல் நோய் குணமாகும்.
இப்படி ஏகப்பட்ட நன்மைகள் முடக்கத்தான் கீரையில் இருக்கின்றன. இதனை எப்படி சட்னி செய்து சாப்பிடலாம் என்பதனை கீழுள்ள பதிவில் பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்:
* முடக்கத்தான் கீரை – 1/4 கப்
* துருவிய தேங்காய் – 1/2 கப்
* வரமிளகாய் – 3
* பூண்டு – 2-3 பல்
* நல்லெண்ணெய் – 1 1/2 டேபிள் ஸ்பூன்
* கடுகு – 1/4 டீஸ்பூன்
* உளுத்தம் பருப்பு – 1/2 டீஸ்பூன்
* புளி – ஒரு சிறிய துண்டு
* உப்பு – சுவைக்கேற்ப
* தண்ணீர் – தேவையான அளவு
சட்னி அரைக்கும் படிமுறை
1. ஒரு கடாயை அடுப்பில் வைத்து அதில் எண்ணெய் விட்டு மிதமாக சூடானதும் அதில் கீரைக் கொட்டி நன்றாக வதக்கிக் கொள்ளவும்.
2. வதங்கிய கீரையை ஒரு தட்டிற்கு மாற்றி விட்டு பின்னர் அதில் நல்லெண்ணெய் விட்டு சூடானதும் துருவிய தேங்காய், புளி, பூண்டு ஆகியவற்றை சேர்த்து, 2 நிமிடம் நன்கு வதக்கி இறக்கி, அதையும் குளிர வைக்க வேண்டும்.
3. பின்னர் குளிர வைத்த பொருட்களை மிக்சர் ஜாரில் போட்டு, புளி, சுவைக்கேற்ப உப்பு மற்றும் நீரை சேர்த்து நன்கு அரைத்துக் கொள்ள வேண்டும்.
4. அரைத்த பின்னர் அதே வாணலியை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும், கடுகு, உளுத்தம் பருப்பு சேர்த்து தாளித்து சட்னியுடன் கலந்தால் சுவையான முடக்கத்தான் கீரை சட்னி தயார்.