புத்தாண்டு தின லொட்டரி குலுக்கலில் முதல் பரிசான 842 மில்லியன் அமெரிக்க டொலர்களை ஒருவர் வென்றுள்ளார்.
அமெரிக்காவின் பிரபல லாட்டரி நிறுவனமான பவர்பால் லாட்டரி பல்வேறு குலுக்கல்களை நடத்தி வருகிறது. அந்தவகையில் புத்தாண்டு குலுக்கலில் முதல் பரிசாக 842 மில்லியன் அமெரிக்க டொலர்களை அறிவித்தது. இதற்கான லொட்டரி குலுக்கல் சமீபத்தில் நடைபெற்று அதற்கான 6 எண்களையும் அறிவித்தது.
இந்த மெகா பரிசு தொகையை வென்றவர் ஃபிளவர் கேஸ்ட்ல் பகுதியில் உள்ள மளிகை கடையில் இருந்து பவர்பால் லாட்டரி சீட்டை வாங்கியதாக தகவல்கள் வந்துள்ளது. இதன் மூலம் புத்தாண்டில் அமெரிக்காவின் பணக்கார நபர்களில் ஒருவராக அந்த நபர் மாறியுள்ளார்.
842 மில்லியன் அமெரிக்க டொலர்கள் பரிசுத்தொகை என்பது அமெரிக்க லொட்டரி வரலாற்றில் 10 -வது பெரிய பரிசுத் தொகையாகும். இந்திய ரூபாயின் மதிப்பில் இதன் மதிப்பு 7000 கோடி ரூபாயாகும். இந்த பரிசுத் தொகையை வென்ற நபர் இரண்டு வழிகளில் இதனை பெற்றுக் கொள்ளலாம்.
முதலாவதாக, 29 ஆண்டுகளில் 30 தவணைகளில் பணத்தை எடுத்துக்கொள்ளலாம் என லொட்டரி நிறுவனம் அறிவித்துள்ளது. இல்லையென்றால், முழுத் தொகையையும் மொத்தமாக எடுத்துக் கொள்ளலாம் என்றும் அறிவித்துள்ளது
. லொட்டரி வென்ற நபருக்கு வரி பிடித்தம் போக மொத்தம் 425.2 மில்லியன் டாலர் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், லொட்டரி வெற்றியாளர் அறிவிக்கப்பட்டு ஒரு வாரம் ஆகியும் அந்த நபர் குறித்த தகவல் இதுவரை ரகசியமாகவே வைக்கப்பட்டுள்ளது.