பிரபல பாடகியான சுசித்ராவின் புதிய டுவிட்டர் பக்கத்தில் நடிகை அமலா பால், பாபி சிம்ஹா மற்றும் டிடி ஆகியோரின் அந்தரங்கப் படங்களை பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளதால் திரை உலகத்தினர் பலரும் அதிர்ச்சிக்குள்ளாகியுள்ளனர்.
பாடகி சுசித்ராவின் டுவிட்டர் பக்கத்தில் தனுஷ், த்ரிஷா, சஞ்சிதா, அனுயா ஆகியோரின் அந்தரங்கப் படங்கள் வெளியானதைத் தொடர்ந்து இன்று அந்த டுவிட்டர் அக்கவுண்ட் முடக்கப்பட்டுவிட்டது.
இந்நிலையில் சில மணி நேரத்துக்கு முன் சுசித்ரா கார்த்திக் என்ற பெயரில் புதிய டுவிட்டர் அக்கவுண்ட் தொடங்கப்பட்டுள்ளது.
இதில் சுசித்ரா புகைப்படத்துடன் உள்ள அந்தப் பக்கத்தில் ஏகப்பட்ட அந்தரங்க புகைப்படங்கள் இடம் பெற்றுள்ளன.
மேலும் ஞாயிற்றுக்கிழமை சின்மயி – அனிருத், திங்கள் கிழமை தனுஷ் – அமலா பால், செவ்வாய்க்கிழமை தனுஷ் – பார்வதி நாயரின் அந்தரங்கப் படங்களை வெளியிடுவேன் என்று இந்தப் பக்கத்தில் இடம்பெற்றுள்ளது.
சினிமா உலகின் உண்மையான முகத்தை தோலுரித்துக் காட்டுவேன் என்று இன்னொரு பதிவு கூறுகிறது. இதில் ஒரு ஆபாச வீடியோவும் பகிரப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.