ஆப்கானிஸ்தானில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டதாக தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது.
இந்நிலநடுக்கம் இன்று (12.1.2024) காலை 4.51 மணியளவில் ஏற்பட்டுள்ளது
குறித்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 4.3 அலகுகளாகப் பதிவாகியுள்ளது.
பூமிக்கடியில் சுமார் 17 கிலோ மீட்டர் ஆழத்தில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது.
இந்நிலையில், ஆப்கானிஸ்தானில் நேற்றையதினமும் (11.1.2024) உள்ளூர் நேரப்படி பிற்பகல் 2.50 மணியளவில் 6.4 ரிக்டர் அளவில் இந்து குஷ் மலைத்தொடரில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டிருந்தது.
இந்த நிலநடுக்கத்தின் தாக்கம் ஆப்கானிஸ்தான் நகரங்களான காபூல், தகார், லக்மான், குனார் மற்றும் பாகிஸ்தான் மற்றும் இந்தியாவிலும் உணரப்பட்டுள்ளது.
கடந்த அக்டோபர் 7ஆம் திகதி ஆப்கானிஸ்தானின் ஹெராத் பகுதியில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் சிக்கி 4,000க்கும் மேற்பட்டவா்கள் உயிரிழந்ததுடன் பல்லாயிரக்கணக்கானோர் படுகாயமடைந்தமை குறிப்பிடத்தக்கது.
மக்களுக்கு வழங்கப்படவுள்ள மின் கட்டண நிவாரணம்: மின்சார சபை விளக்கம்