மனிதர்கள் வாழும் காலம் வரை உடல் ஆரோக்கியத்துடன் வாழவே விரும்புவார்கள்.
அப்படி நாம் தினம் உண்ணும் உணவுடன் சில முக்கிய காய்கறிகள் மற்றும் பழங்களை சேர்த்து கொண்டால் நோய் நொடியின்றி ஆரோக்கியமாக வாழ முடியும்.
எலுமிச்சை
எலுமிச்சையில் விட்டமின் சி அதிகளவில் உள்ளது, இதில் இருக்கும் Anticoagulant சக்தி உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகமாக்குகிறது.
அன்னாச்சி பழம்
அன்னாச்சியில் இரும்பு மற்றும் கால்சியம் சத்து அதிகம் உள்ளது. இதில் இருக்கும் எதிர்ப்பு அழற்சி உடலில் உள்ள நச்சுக்களை வெளியேற்றுகிறது.
தர்பூசணி
இதில் கொழுப்பை தடுக்கும் வேதிப்பொருள் அடங்கியுள்ளது. இதை சாப்பிட்டால் புற்றுநோய், இதயநோய் பாதிப்புகள் வருவது குறையும்.
பிராக்கோலி
பிராக்கோலியில் இருக்கும் ஊட்டசத்துக்கள் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்து புற்று நோய் வராமல் தடுக்கிறது.
ஆப்பிள்
தாவர வேதிப்பொருட்கள் அடங்கிய ஆப்பிளை தினம் சாப்பிட்டால் ஆஸ்துமா, நீரிழிவு நோய், இதய நோய் வருவது குறையும்.
ஆரஞ்சு
விட்டமின் சி அதிகம் அடங்கியுள்ள ஆரஞ்சில் புற்றுநோயை தடுக்கும் சக்தி உள்ளது. மேலும், இது நாள்பட்ட அழற்சி நோய்களையும் தடுக்கிறது.