தூத்துக்குடி மாவட்டம் கரிசல்கிராமத்தை சேர்ந்தவர் கோவிந்தராஜ், மும்பையில் கூலி வேலை செய்து வருகிறார்.
இவரது மனைவி பாமா, இவர்களுக்கு சுஜிதா(13) என்ற மகளும், சிவனேஷ்(11) என்ற மகனும் உள்ளனர்.
நேற்று முன்தினம் பிள்ளைகளை தோட்டத்துக்கு அழைத்து சென்ற பாமா, சுஜிதாவை 50 அடி ஆழ ஆழ்கிணற்றுக்குள் தள்ளி விட்டார்.
இதை பார்த்த சிவனேஷ் அலறித்துடிக்கவே அவனையும் உள்ளே தள்ளிவிட்டுள்ளார்.
இருவரும் கிணற்றுக்குள் உயிருக்கு போராடிய வேளையில், அருகிலிருந்து இரும்பு பைப்பை பிடித்துக் கொண்டு சிவனேஷ் கதறியுள்ளான்.
அந்தநேரத்தில் தோட்டத்துக்குள் ஊர்க்காரர்கள் சிலர் வரவே பாமா அங்கிருந்து தப்பியோடியுள்ளார்.
சிவனேஷின் சத்தம் கேட்டு ஓடிவந்த நபர்கள், அவனை காப்பாற்றியுள்ளனர்.
இறந்துபோன சுஜிதாவின் சடலத்தையும் மீட்டனர், தன்னுடைய அம்மாவே இதை செய்ததாக சிவனேஷ் கூறியுள்ளனர்.
இதுதொடர்பாக தட்டார்மடம் பொலிசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தினர்.
விசாரணையில், பாமாவுக்கும், அதே பகுதியை சேர்ந்த ஒருவருக்கும் கள்ளத்தொடர்பு இருந்ததாகவும், இந்த விவகாரத்தை தெரிந்து கொண்ட சுஜிதா தாயை கண்டித்ததும் தெரியவந்தது.
இதனால் ஆத்திரம் அடைந்த பாமா பிள்ளைகளை திட்டமிட்டு கொன்றது தெரியவந்தது.
இதற்கிடையே பாமாவின் தந்தை, கோவிந்தராஜின் உறவினர்கள் தனது மகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாகவும், சொத்துகளை அபகரித்துக் கொண்டு கொடுமைப்படுத்தியதாகவும், இதனால் தான் பிள்ளைகளுடன் பாமா தற்கொலைக்கு முயற்சி செய்ததாகவும் புகார் அளித்துள்ளார்.
இதுகுறித்து பொலிசார் விசாரணை நடத்தி வரும் நிலையில், தலைமறைவான பாமாவை தேடி வருகின்றனர்.