Loading...
வற் வரி அதிகரிப்பின் காரணமாக நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு வழங்கப்படும் உணவு மற்றும் பானங்களின் விலை அதிகரிக்கப்பட்டுள்ளது.
வற் வரியின் அதிகரிப்பின் பின்னர் உணவுப் பொருட்களின் விலையில் ஏற்பட்ட அதிகரிப்பின் காரணமாக இவ்வாறு நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கான உணவுகளின் விலைகளும் அதிகரித்துள்ளன.
இரண்டு மடங்காக இவ்வாறு விலைகள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
Loading...
நாடாளுமன்றத்தின் உணவு மற்றும் பானங்களுக்காக அரசாங்கம் பெரும் தொகையை செலவிடுவதாகவும், இதற்காக நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் ஊழியர்களிடம் மிகக் குறைந்த தொகையே அறவிடப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தநிலையில், பொருளாதாரத்தை கருத்தில் கொண்டு, நாடாளுமன்ற உணவுகளுக்கு சில கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.
Loading...